சிலம்பத்தை பற்றி …

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுப்பது சிலம்ப விளையாட்டு. தமிழர் பாரம்பரியமான இவ்விளையாட்டில் கலை அம்சங்கள் பலவும் பொருந்துவதால் இவ்விளையாட்டு சிலம்பகலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கலையை சரஸ்வதி சிலம்பப்பள்ளியில் அனைத்து வயதினருக்கும் இருபாலருக்கும் சிறந்த முறையில் சொல்லித்தருகின்றோம்.

ஏன் சிலம்பம் கற்க வேண்டும்?

* உடலுக்கும் மனதுக்கும் உன்னதமான உற்சாகமான பயிற்சி. ஆகவே உடல் மற்றும் மனநலத்தை பேணுகிறது. உடல் மற்றும் மனவளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

* இது விளையாட்டு மட்டும் அன்று. இதில் கலை அம்சமும் உள்ளது. 

* தோழமை, வீரம், தன்னம்பிக்கை, பாரம்பரியம் ஆகிய உணர்வுகளை தூண்டக்கூடியது.

* சிலம்பம் எளிமையானது. சுற்ற கம்பும் ஆட இடமும் இருந்தால் போதுமானது.

சிலம்பம் யார் கற்கலாம்?

இரு பாலரும், அனைத்து வயதினரும் கற்கலாம். பொதுவாக சிலம்பம் என்றாலே இளவயதினர் கம்பை வேகமாக சுற்றுவது நினைவிற்கு வரலாம். ஆனால் குருமார்களும், வயோதிகர்களும், குழந்தைகளும், பெண்களும் மெதுவாக சுற்றினாலேயே அழகாக இருக்கும். பாடங்களை படிக்கும் போதும் மெதுவாகவே சுற்றியே  பழகுவோம். ஆகவே சிலம்பம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது.