எங்களை பற்றி …

சரஸ்வதி சிலம்பப்பள்ளி, சரஸ்வதி யோகா மற்றும் கலைகள் அறக்கட்டளையின் ஓர் ஸ்தாபிதமாகும். சிலம்பக்கலையை அனைத்து தரப்பினருக்கும் முக்கியமாக கிராமத்து இளைஞர்களுக்கு செவ்விய முறையில் கற்றுத்தரும் நோக்கத்தை கொண்டுள்ளோம். நான்கு கிராமங்களுக்கும் மேலாக தற்போது கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சாயுங்காலம் சிலம்பம் சுற்றினால் அலைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்பாடு குறைந்து நட்பும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது எங்கள் கருத்து. மேலும் சிலம்பக்கலையில் தேர்ச்சி பெற பல பாடங்களும், நுணுக்கங்களும் உள்ளதால் அதை படிக்கும் மாணாக்கருக்கு ஆர்வம் குறைவதில்லை.